×

தமிழகத்தில் பாஜக மிகப்பெரும் கட்சியாக மாறி வருகிறது.. அதிமுக - பாஜக கூட்டணி தான் தொடரும் : பாஜக தலைவர் முருகன் உறுதி!!

சென்னை : தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பேசிய  பாஜக நிர்வாகி வி.பி.துரைசாமி, தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற 2 துருவ அரசியல் மலையேறிவிட்டதாக தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் பாஜக தலைமை ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமையும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.   இந்த கருத்துக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் முருகன், பாஜக தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக மாறி வருகிறது என்றார். அதனை வெளிப்படுத்தும் விதமாகவே வி.பி.துரைசாமி அவ்வாறு கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

அத்துடன் தமிழகத்தில் பாஜக மிகப்பெரும் கட்சியாக மாறி வருவதாகவும், அதேசமயம் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் எனவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இனி திமுக - பாஜகவுக்கு தான் போட்டி நிலவும் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இ-பாஸ் முறையை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் வி.பி.துரைசாமியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி குறித்து வி.பி.துரைசாமி கூறியதை பாஜகவின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. பாஜக தலைவர் எல்.முருகன் அப்படி கூறினாரா என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.


Tags : BJP ,Murugan ,alliance ,party ,Tamil Nadu ,AIADMK , Tamil Nadu, BJP, party, AIADMK, BJP, alliance, BJP, leader, Murugan, confirmed
× RELATED பிரதமர் மோடியின் பிறந்தநாளை...