×

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுனர்கள் கழுத்தில் தூக்கு மாட்டி போராட்டம்!!!

திருச்சி:  திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாகன ஓட்டுனர்கள் தூக்கு மாட்டி கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறகுகள் என்ற பெயரில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் திருச்சி இரயில்வே நிலையத்தில் இந்த ஆர்பாட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், ஆர்.டி.ஓ சம்மந்தப்பட்ட ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுனர்கள் தூக்கு மாட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தாங்கள் மிகவும் வறுமையில் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் கறுப்புக் கயிற்றை மாட்டிக்கொண்டு, தூக்கில் தொங்குவதுபோல் செய்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் அனைத்து ஓட்டுனர்களும் அரசு அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : drivers ,Trichy , Drivers protest , Trichy ,
× RELATED கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர்கள் கைது