×

திருச்சியில் கொரோனா ஊரடங்கால் சம்பா சாகுபடிக்கு பணமின்றி தவிக்கும் விவசாயிகள்!: அரசு உதவி செய்ய கோரிக்கை!!!

திருச்சி:  திருச்சியில் 15 நாட்களில் சம்பா சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் கையில் பணமின்றி தவித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் அனைவரது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக விவசாயிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சம்பா சாகுபடி விவசாயத்தை பெரிதும் நம்பி இருக்கும் திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு சாகுபடி சிறப்பாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து அங்குள்ள விவசாயிகள் தெரிவிப்பதாவது, கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் போதிய அளவு நீர்வரத்து, நெல்மணிகள் கையிருப்பு என அனைத்து வசதிகளும் இருந்தபோதிலும், ஊரடங்கால் சம்பா சாகுபடிக்கு தேவையான பணம் கையில் இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு ஏக்கர் சம்பா சாகுபடிக்கு தேவையான 40 ஆயிரம் ரூபாய் பணம் இல்லாமல், கடன் வாங்கும் சூழலுக்கு தங்களை தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சாகுபடிக்கான மருந்துகளின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவை ஒருபுறமிருக்க மற்றொரு புறம் அரசு விவசாய கடனை கட்ட, தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. இதனால் தமிழக அரசு இந்தாண்டு சாகுபடி செய்வதற்கு கடன் வழங்கி, தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government ,Trichy , Farmers ,lack of money, corona, samba cultivation ,Trichy ,
× RELATED விவசாயிகள் போராட்டம்