×

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும்... எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதனை அரசு நிறைவேற்றும் : அமைச்சர் ஜெயக்குமார்!!

சென்னை: முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கும் என்றும் வேட்பாளர் குறித்து  அமைச்சர்கள் கருத்து கூறாமல் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்பது குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோரின் மாறுபட்ட கருத்தால் கட்சியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே, அதிமுக தற்போதே தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில், சென்னை காசிமேட்டில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும். அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து கூறுவது அதிமுகவை பலவீனப்படுத்துவதாகவே இருக்கும். எடப்பாடி பழனிசாமி தான் என்றும் முதல்வர் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல.

கூட்டணி பற்றி தமிழக பாஜக தலைவர் முருகன் கருத்து கூறிய பிறகே அதிமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்.துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியதை பாஜகவின் நிலைப்பாடாக எடுக்க முடியாது. எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதனை அதிமுக அரசு நிறைவேற்றும். எஸ்.வி.சேகர் தேசியக் கொடியை அவமதித்து, முதல்வரை அவதூறாக பேசியதை ஏற்க முடியாது. மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.தடுப்பூசியை கண்டுபிடித்து மக்கள் பயன்படுத்தினால் கொரோனா இல்லாத இந்தியா உருவாகும், எனத் தெரிவித்தார்.

Tags : Jayalalithaa ,MGR ,SV Sekhar ,Minister Jayakumar ,jail ,government , MGR, Jayalalithaa, Rule, SV Sehgar, Prison, Government, Execution, Minister Jayakumar
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...