×

நாங்கள் இருக்கின்ற பக்கம் நிச்சயம் வெல்லும்: தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி...வி.பி துரைசாமி பேட்டி.!!!

சென்னை: தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி என தமிழக பாஜக மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் வி.பி துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  இடஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும் இட ஒதுக்கீட்டில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

கனிமொழியை இந்தியரா என கேட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் என்னை பொறுத்தவரை அதுபோன்ற நிகழ்வு நடைபெறவில்லை என்று கூறினார். இது தவறான செய்தியாக இருப்பதாக கூறினார். திமுக அதிக எம்.பிக்களை  கொண்டுள்ளனர். இந்நிலையில் பாராளுமன்றத்தில் அவர்கள் தான் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றார். அதுமட்டுமின்றி அவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதை விட, வெளியில் வந்து தான் அதிகம் பேசுகின்றனர். வெளிநடப்பு  செய்வதை மட்டுமே முதல் காரியமாக அவர்கள் செய்து வருகின்றனர்.

 எதிர்க்கட்சிகள் கோவிட் காலத்தில் ஆக்கபூர்வமான கருத்துகளை, யோசனைகளை அளிக்க வேண்டும் என்றார்.  மேலும் 14ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் கனிமொழி நாம் உள்ளே நுழைந்தால் உள்ளே காவலர்கள் அழைத்து செல்வார்கள், உரிய முறையில் மரியாதை கொடுப்பார்கள் நானும் ராஜசபா எம்.பி யாக இருந்துள்ளேன். கனிமொழி கூறியதை போல் நடந்திருப்பற்கான வாய்ப்பில்லை முறையாக விசாரித்தால் உண்மை தெரியும்.கனிமொழி கருத்திற்கு ஆதரவளிப்போரின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இவர்கள் நாடாளுமன்றத்திலோ, சட்டத்திலோ உள்ளே  பேசுவதை விட வெளியே தான் அதிகம் பேசுகிறார்கள்.

நான் பாஜகவில் இருப்பதால் இவ்வாறு சொல்லவில்லை நிச்சயமாக வேறு யாருக்காவது நடந்துள்ளதா என்று பாருங்கள் கனிமொழி பேசியதை போல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியில் பேசுகிறாரோ இல்லையோ ஆனால் 14ஆண்டுகளில்  நாடாளுமன்றத்தில் இருந்துள்ளார். இந்தி தெரிந்திருக்கும் இது போல் சம்பவம் நடந்திருக்காது. கனிமொழிக்கு இந்தி தெரியும் என்று ஹச்.ராஜா கூறிய கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் திமுக- அதிமுக என்ற நிலை மாறி,  திமுக-பாஜக என்ற நிலை உருவாகியுள்ளது. நிச்சயமாக எங்கள் தலைமையிலான கூட்டணி தான் நாங்கள் இருக்கின்ற பக்கம் தான் நிச்சயம் வெல்லும். பாஜகவை எந்த கட்சி அனுசரித்து செல்கிறதோ அவர்களுடன் கூட்டணி, பாஜக தலைமையில் தான் ஆட்சி நடைபெறும். பாஜவிற்கு  திமுகவிலிருந்து யார் வருவார்கள் என்று கூறுவது நாகரிகமாகாது, நிச்சயம் நிறைய பேர் வருவார்கள் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர்கள்(திமுக) அதிர்ச்சிக்குள்ளாவார்கள் என்றார்.


Tags : Thuraisamy ,BJP ,alliance ,Tamil Nadu , The page we are on will definitely win: BJP-led alliance in Tamil Nadu ... VP Thuraisamy interview. !!!
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்