×

இலங்கை தாதா அங்கொட லொக்கா பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததற்கான ஆதாரம் சிக்கியது: சிபிசிஐடி தீவிர விசாரணை.!!!

கோவை:  கடந்த மாதம் கோவையில் உயிரிழந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா தனது முகத்தை மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததற்கான புகைப்பட ஆதாரங்கள் சிபிசிஐடியிடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு குற்ற செயல்களுக்கு தலைவனாகவும், பிரபல போதை பொருள் மன்னனாகவும் இருந்தவர் இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதா அங்கொட லொக்கா.  இவர் 2 வருடங்களுக்கு முன்பாக கோவையில் பதுங்கி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.

 அதாவது அங்கொட லொக்கா தனது பெயரை மாற்றி கொண்டு, உருவத்தை மாற்றி கொண்டு கோவையில் இருந்து வந்துள்ளார். மேலும் இவர் இலங்கை அரசால் தேடப்பட்டு வரும் மிக முக்கியமான குற்றவாளியாவார்.  இதனால் கோவைக்கு தப்பி வந்த இவர் பிரதீப் என்ற பெயரில் நடமாடி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் இவர் கோவையில் உயிரிழந்தார். இவர் தனது பெயரை மட்டுமல்லாது முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். ஏனெனில் அனைத்து நாடுகளிலும் இவரது புகைப்படங்கள் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் ஒருவராக இருப்பதால், இவர் அதிலிருந்து தப்பிக்க முகத்தை மாற்றியுள்ளது தற்போது சிசிபிசிஐடி அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் அங்கொட லொக்கா மரணத்தில் தொடர் மர்மங்கள் நிறைந்துள்ளதாகவும் தெரிகிறது. ஏனெனில் போஸ்ட்மாடம் ரிப்போர்ட்டின்படி அவரது கை மற்றும் கால் விறல் நகங்களில் நீல நிறமாக இருந்திருக்கிறது. எனவே இந்த மரணத்தில் அதிகாரிகளுக்கு அதிகளவு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இறந்தது அங்கொட லொக்காதானா? என்ற சந்தேகம் தொடர்ந்து வலுத்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது அங்கொட லொக்காவின் பெற்றோரின் ரத்த மாதிரிகளை அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து அந்த ரத்த மாதிரிகளை கொண்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர். மேலும் அங்கொட லொக்கா சினிமாவில் நடிக்க போவதாக கூறி முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அதுதொடர்பான புகைப்படங்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது. இதனால் அதிகாரிகள் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : Sri Lankan ,Dada Angoda Lokka , v
× RELATED எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது...