×

முதலாளி ரூ.2 லட்சம் தராததால் டிரைவரை கடத்தி சரமாரி தாக்குதல்

அண்ணாநகர்: திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (25). கோயம்பேடு திருவீதி அம்மன் கோயில் தெருவில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வரும் ஷியாம் என்பவரிடம் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
நேற்று ஷியாமை செல்போனில் தொடர்புகொண்ட ஒருவர், நிகழ்ச்சி ஒன்றுக்கு சமைக்க வேண்டும். நீங்கள், கோயம்பேடு ரோகிணி தியேட்டர் அருகே நேரில் வந்து பேசி, முன் பணத்தை வாங்கி செல்லுங்கள், என கூறியுள்ளார். இதையடுத்து, ஷியாம் தனது டிரைவர் முருகனை அங்கு அனுப்பி வைத்துள்ளார்.

அங்கிருந்த 7 பேர் முருகனை காரில் அம்பத்தூர் சுடுகாட்டிற்கு கடத்தி சென்று, சரமாரி தாக்கியுள்ளனர்.அப்போது, முருகன் என்னை ஏன் அடிக்கிறீர்கள் என கேட்டபோது, உனது முதலாளி 2 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும், அவன் வருவான் எனப் பார்த்தோம். நீ சிக்கிக்கொண்டாய், என கூறியுள்ளனர். பின்னர், மீண்டும் கோயம்பேடு கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர். புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கடத்திய அயப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (25), கொளத்தூரை சேர்ந்த கென்னடி, அருள்ராஜ், ஜெய், சின்னா ஆகியோரை கைது செய்தனர்.

Tags : employer , Boss, .2 lakh, driver, kidnapper, volley attack
× RELATED டூவீலர்கள் மோதல் டிரைவர் சாவு