சென்னையில் 4 மண்டலங்களில் சோதனைகள் அதிகரிப்பு: மாநகராட்சி திட்டம்

சென்னை: சென்னையில் 1,10,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 96,466 பேர் குணமடைந்துள்ளனர். 2,327 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது திருவொற்றியூரில் 384 பேர், மணலியில் 103 பேர், மாதவரத்தில் 519 பேர், தண்டையார்பேட்டையில் 664 பேர், ராயபுரத்தில் 821 பேர், திருவிக நகரில் 737 பேர், அம்பத்தூரில் 1,619 பேர், அண்ணா நகரில் 1,214 பேர், தேனாம்பேட்டையில் 713 பேர், கோடம்பாக்கத்தில் 1,433 பேர், வளசரவாக்கத்தில் 781 பேர், ஆலந்தூரில் 548 பேர், அடையாறில் 839 பேர், பெருங்குடியில் 485 பேர், சோழிங்கநல்லூரில் 454 பேர் என 11,328 பேர் சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், அண்ணா நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்த இந்த 4 மண்டலங்களில் பரிசோதனையை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Related Stories:

>