×

டாஸ்மாக் கடையில் வட்டாட்சியர் திடீர் ஆய்வு: குடிமகன்களுக்கு எச்சரிக்கை

செய்யூர்: செய்யூரில் உள்ள டாஸ்மாக் கடையில், செய்யூர் வட்டாட்சியர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கடைக்கு வரும் குடிமகன்கள் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் இருந்து எல்லையம்மன் கோயில் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு, மதுபானங்கள் வாங்குவதற்காக வரும் குடிமகன்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என செய்யூர் வட்டாட்சியர் ராஜேந்திரனுக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, வட்டாட்சியர் ராஜேந்திரன், மேற்கண்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு மதுபானங்கள் வாங்குவதற்காக வந்த குடிமகன்கள் பலர், முககவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் இருந்தது கண்டு அவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும், இதே நிலை தொடர்ந்தால் அபராதம் அல்லது வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தார். அதன்பிறகு, குடிமகன்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்களை வாங்கி சென்றனர்.

Tags : store ,Governor raids ,Tasmac ,citizens , Tasmac Store, Governor, Inspection, Citizen, Warning
× RELATED தென்தாமரைகுளம் அருகே டாஸ்மாக் கடையில் துளைபோட்டு கொள்ளை முயற்சி