×

உத்திரமேரூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கம்மாளம்பூண்டி கிராமம் தேரடித் தெரு, நடுத் தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு, ரோடு தெரு ஆகிய தெருக்களில் 200 கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு, அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கிராமத்தில் பலர் மின் மோட்டார் மூலம் குடிநீர் பிடிப்பதால், பலருக்கு குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். கடந்த 10 நாட்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தமான இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், உத்திரமேரூர் - மதுராந்தகம் சாலை, கம்மாளம்பூண்டி பஸ் நிலையம் அருகே நேற்று கிராம மக்கள் திரண்டனர். அங்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொது மக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : road ,Uttiramerur , Uttiramerur, with empty buckets, public, road block
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை