×

கொரோனா தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது: எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா பேட்டி..!!

டெல்லி: உலகில் 200- க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் நுண் கிருமியான   கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியது. இந்த சூழலில்  உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தோனேசியா கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி பரிசோதனையின் 3-ம் கட்டத்தை தொடங்குவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தற்போது அளித்த பேட்டியில்: ரஷ்யாவின் தடுப்பூசி வெற்றிகரமாக இருந்தால், அது பாதுகாப்பானதா மற்றும் பயனுள்ளதாக இருக்குமா என்பதை நாம் பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். பெருமளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்தியா-இஸ்ரேல் இடையேயான  உறவுகள் பலமாக உள்ளன.

முன்னதாக, மருந்துகள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை இந்தியா இஸ்ரேலுக்கு உதவியது. இப்போது இஸ்ரேல் ரோபோ டெலிகான்சல்டேஷன் மற்றும் டெலிமோனிட்டரிங் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களை அனுப்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Randeep Gularia ,India ,AIIMS , Randeep Gularia, AIIMS Director, Corona Vaccine, Manufacturing, India
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...