×

2025ம் ஆண்டுக்குள் உலகளாவிய வர்த்தக ஏற்றுமதியில் 5% பங்கை இந்தியா இலக்காக நிர்ணயிக்க சிஐஐ அறிவுறுத்தல்

டெல்லி: 2025ம் ஆண்டுக்குள் உலகளாவிய வர்த்தக ஏற்றுமதியில் 5% பங்கை இந்தியா இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு - சி.ஐ.ஐ தெரிவித்துள்ளது. இந்தியா தற்போது வர்த்தக ஏற்றுமதியில் 1.67% பங்கையும், சேவை ஏற்றுமதியில் 3.54% பங்கையும் கொண்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய வர்த்தக ஏற்றுமதியில் 5% பங்கையும், சேவை ஏற்றுமதியில் 7% பங்கையும் இந்தியா இலக்காக நிர்ணயிக்க வேண்டும். இந்த இலக்கை அடைய உள்நாட்டு சந்தையில் போட்டியினை வலுப்படுத்துதல் சர்வதேச போட்டித்தன்மையை வளர்ப்பது மற்றும் துறை சார்ந்த வளர்ச்சியை உருவாக்குதல் ஆகிய மூன்றுமுனை அணுகுமுறையை பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா தொற்று சூழல் உலக வர்த்தகத்தை எதிர்மறையாக பாதித்துள்ளது. இருப்பினும், இந்தியா உலகத்துடன் சிறப்பாக ஈடுபடவும் அதன் ஏற்றுமதி செயல்திறனை அதிகரிக்கவும் ஒரு பெரிய வாய்ப்பை கொரோனா வழங்கியுள்ளது. அரசுக்கும் தொழில்துறைக்கும் இடையே வலுவான கூட்டுறவு மூலம் இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த இது ஒரு சரியான தருணம். மேலும் இந்திய தயாரிப்புகளின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிக வரி மற்றும் இடைநிலை பொருட்களுக்கு குறைந்த வரியை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை சி.ஐ.ஐ முன்மொழிந்துள்ளது. வெளிநாடுகளுக்கான வர்த்தக கொள்கையை வெளியிடுவதை தவிர ஏற்றுமதியை கணிக்க கூடிய வகையில், அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கு வட்டி சமநிலைப்படுத்துதல் திட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுக்கு நீட்டிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஏற்றுமதிக்கான நிதியை விரிவுப்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.



Tags : CII ,India , Exports, India, CII
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!