×

இந்தியாவில் ஏற்படும் கொரோனா உயிரிழப்பு: 42 % பேர் மகாராஷ்டிரா மக்கள்: தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி...!!

மும்பை: இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், முன்பை விட பலமடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் திகழ்கிறது. அம்மாநிலத்தில் வேகமாக பரவி வரும் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மராட்டிய மாநில எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கோவாவிற்கு சென்றிருந்தார். அங்கு அந்த மாநில பா.ஜனதா முதல்வரான பிரமோத் சாவந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதன் பின்னர் தேவேந்திர பட்னாவிசிடம் மராட்டிய கொரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பியதை அடுத்து அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது: மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நிலைமை மிக மோசமாக உள்ளது.

நாடு முழுவதும் ஏற்படும் மொத்த உயிரிழப்பில் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 42 சதவீதம் பேர் பலியாவ தாக தகவல் தெரிவித்தார். மேலும் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பதை மராட்டிய அரசு தடுக்க தவறி விட்டது. மேலும் பரிசோதனைகளை அதிகரித்து, தனிமை மையங்களை அதிகரிக்க வேண்டும். இதனையடுத்து, ஆன்டிஜென் பரிசோதனை முறையை கைவிட்டு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Tags : deaths ,Maharashtra ,Corona ,India ,interview ,Devendra Patnavis , Corona deaths, India,42% Maharashtra people, Devendra Patnavis interview
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...