×

தேனியில் மருத்துவரை தொடர்ந்து மனைவியும் கொரோனா தொற்றினால் பலி!!!

தேனி:  தமிழகத்தில் கொரோனாவால் மருத்துவர்களின் மரணம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் மனைவியும் வைரஸ் தொற்றினால் பலியாகியுள்ளார். தேனி மாவட்டத்தில் அண்மை காலமாக கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 8550 ஆக உள்ளது. இதில் தற்போது 3342 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தேனியில் கொரோனா தொற்றினால் பலியான மருத்துவரின் மனைவியும் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பினால் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் பிரதீப், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் பலியாகிவிட்டார். இந்த நிலையில் கம்பம் நகரில் தனியாக மருத்துவமனை நடத்தி வந்த இவரது மனைவிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது தாயின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து ஒப்படைக்குமாறு அவரது மகன் மருத்துவமனை நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இதனிடையே மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் கோதண்டராமன் இறந்துவிட்டார். ராஜபாளையத்தை சேர்ந்த இவர் இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகளில் ஒருவராவார்.

Tags : doctor ,Theni , Wife dies ,corona infection,doctor,Theni
× RELATED பூசணி விதையின் பயன்கள்!