×

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சற்று கவலைக்கிடம்: ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தகவல்...!!

டெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகா்ஜிக்கு மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து அவருக்கு கடந்த திங்கள்கிழமை வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மூளையில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. எனினும் அவா் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் இருக்கிறாா் என்ற தகவல் வெளியானது.

மேலும் அவரது உடல்நிலையை ராணுவ மருத்துவா்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனா். முன்னதாக நடத்தப்பட்ட பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறி வந்தன. இதையடுத்து அவர் தன்னோடு தொடா்பில் இருந்தவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் பிரணாப் முகர்ஜி அறிக்கை பதிவு மூலம் தெரிவித்தார்.

இதனிடையே பிரணாப் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக பிடிஐ தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pranab Mukherjee ,Army Research Hospital , Former President Pranab Mukherjee, Health Anxiety, Military Research Hospital
× RELATED டெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜயின் இறுதிச் சடங்கு