×

வெண்பா கவிஞர் என்று போற்றப்படும் முதுபெரும் பாடலாசிரியர் பி.கே. முத்துசாமி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

சென்னை: முதுபெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே. முத்துசாமி உடல்நலக்குறைவால் காலமானார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்ப்புதுப்பட்டியை சேர்ந்த முத்துசாமி வெண்பா கவிஞர் என்று போற்றப்பட்டவர். 1920ல் பிறந்த இவருக்கு  தற்போது வயது 102. ஆனாலும் 16 வயது இளைஞர் போல் சுறுசுறுப்பாக தனி ஒரு ஆளாய் எங்கும் புத்தகங்கள், விருதுகள் என சிறிய வீட்டில் தானே சமைத்து உண்டு வாழ்ந்து வந்தார். இளமை காலத்தில் சுற்றுப்புற கிராமங்களில் நாடக மேடைகளில் பல்வேறு நாடகங்களை நடத்தியவர் இவர்.  இந்த கால பாடல் வரிகளை விட அந்த கால பாடல் வரிகள் இன்றளவும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. அந்த வகையில், பல்வேறு படங்களுக்கு சிறப்பான பாடல் வரிகளை எழுதியவர் பி..கே.முத்துசாமி. 1958ம் ஆண்டு வெளியான தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் இடம்பெற்ற மண்ணுக்கு மரம் பாரமா..மரத்துக்கு இலை பாரமா.. குழந்தைக்கு தாய் பாரமா என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

காவேரியின் கணவன் படத்தில் சின்ன சின்ன நடை நடந்து...செம்பவள வாய் திறந்து, பொன்னித் திருநாள் படத்தில் கண்ணும் கண்ணும் கதைபேசி உள்ளிட்ட வெற்றி பாடல்களை பி.கே. முத்துசாமி எழுதியுள்ளார். மாப்பிள்ளை வந்தார், மாட்டு வண்டியிலே பொன்னு வந்தார் பொன்னு வந்தார் பொட்டி வண்டியிலே என்ற பழங்கால பட பாடலை எழுதியவரும் இவரே. திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய பி.கே. முத்துசாமி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவர். வயது மூப்பால் காலமான பி.கே. முத்துசாமிக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags : PK Muthusamy , Veteran lyricist, P.K. Muthusamy, passes away,ill health .. !!
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...