×

பறக்கை பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள்: விவசாயிகள் கவலை

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ சாகுபடி என இருபோக ெநல்சாகுபடி நடந்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டு, பறக்கை, தேரூர், சுசீந்திரம் பகுதியில் அறுவடைக்கு தயாராகும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் நெற்பயிர்களை பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து அழித்து வருகிறது. இந்த பறவை வாத்து போன்ற வடிவில் உள்ளது. இதனை மூக்கரத்தாரா என்று அழைக்கின்றனர். இந்த பறவைகள் இரவு நேரத்தில் கூட்டமாக வந்து வயல்பரப்புகளில் இறங்குகிறது. இனால் நேராக நிற்றும் நெற்பயிர்கள் சாய்கிறது. அதன்பிறகு பறவைகள் நெல்லை தின்று விட்டு அங்கிருந்து செல்கிறது.

இந்த பறவைகள் தற்போது பறக்கை மூன்றாம் குளம் மூலம் பாசன வசதிபெறும் பத்தில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து அந்த பத்தின் தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:  பறக்கை மூன்றாம் குளம் மூலம் பாசனவசதி பெறும் 1500 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. தற்போது இந்த நிலத்தில் பெரும்பாலான பகுதியில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 750 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது நெல்சாகுபடி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் முதலில் பறக்கை, தேரூர், சுசீந்திரம் பகுதியில் வயல்களில் அறுவடை தொடங்கும்.

கன்னிப்பூ அறுவடை பறக்கை மூன்றாம் குளம் பத்தில் இன்னும் 10 நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பறவை கூட்டம் வந்து நெற்கதிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் மகசூல் பாதித்து, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags : area , Bird, paddy, birds, farmers
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...