×

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் கொரோனாவால் 1,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், சுமார் 1,500 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதே சமயம் சிலர் கொரோனாவால் இறந்துள்ளனர். இந்நிலையில், அம்பத்தூர் சரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பரணிகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும், அவருடன் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு, காவலர்கள் உள்ளிட்டோரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கொரோனா தொற்றை தடுக்கும் களப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இன்ஸ்பெக்டர் பரணிகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், அணிருதீன், ஏட்டுகள் ஐயப்பன், சந்திரசேகர் ஆகியோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர்கள் உடனடியாக கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்டனர். அப்போது, அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் பரணிகுமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் அம்பத்தூர், திருமுல்லைவாயலில் உள்ள வீடுகளில் தனிமைபடுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், எஸ்.ஐ அணிருதீன், ஏட்டுகள் சந்திரசேகரன், அய்யப்பன் ஆகியோர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரே சமயத்தில், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐக்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டிருப்பது சக காவலர்கள் மத்தியில் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : area ,persons ,inspector ,Corona ,SIs ,Ambattur , Ambattur, Industrial Estate, Inspector, SIs, Corona for 5 persons
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு