×

வெளிநாடுகளில் சிக்கி தவித்த 370 இந்தியர்கள் மீட்பு

சென்னை: அமெரிக்கா, அபுதாபி, இலங்கை ஆகிய நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களில் 370 பேர் மீட்கப்பட்டு 4 சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை அழைத்துவரப்பட்டனர். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு 90 இந்தியர்களுடன் சென்னை வந்தது. இவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களான சவீதா மருத்துவ கல்லூரிக்கு 2 பேரும், அரசின் சிறப்பு அனுமதி பெற்று வீடுகளில் தனிமைப்படுத்த 2 பேரும், 86 பேர் சென்னை நகர ஓட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனர். அபுதாபியிலிருந்து 256 இந்தியர்களுடன்  சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. இவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களான சவீதா மருத்துவ கல்லூரிக்கு 142 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டல்களுக்கு 114 பேரும் அனுப்பப்பட்டனர்.

சென்னை வந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்கச் சோதனை முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதுபோல, இலங்கையிலிருந்து 24 இந்தியர்களுடன் மீட்பு விமானம் நேற்று காலை சென்னை வந்தது. இவர்கள் அனைவரும் அங்கு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். அந்த நிறுவனமே அரசு சிறப்பு அனுமதி பெற்று தனி விமானத்தில் இந்தியாவிற்கு இவர்களை அழைத்து வந்தது. எனவே, அவர்களுக்கு சென்னை விமானநிலையத்தில் இலவச மருத்துவ பரிசோதனை, அரசின் இலவச தங்குமிடங்கள் இல்லை. இதையடுத்து குடியுரிமை, சுங்கச்சோதனைகள் முடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்த சென்னை நகர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags : Indians , Overseas, stranded, 370 Indians, rescued
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...