×

ரேஷனில் இலவசமாக வழங்க கோவை வந்த 1.50 லட்சம் முககவசத்தில் 70 ஆயிரம் தரமற்றவை: அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்

கோவை: கோவைக்கு வந்த 70 ஆயிரம் முக கவசங்கள் தரமற்றவை என கூறி அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் ரேஷன் கார்டு உள்ள  குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு  தலா 2 முக கவசம் வீதம் அனைவருக்கும் இலவச முக கவசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 9 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 82 லட்சம் முக கவசம் வழங்க திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக 1.50 லட்சம் முக கவசங்கள் கோவைக்கு வந்தன. இதில் 70 ஆயிரம் முக கவசம் போதிய தரமில்லை என்று கூறி திருப்பி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுைகயில், கோவை மாவட்டத்தில் உள்ள 1,442 ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. தற்போது 1.50 லட்சம் முக கவசம் கோவை வந்தது. இதில், சுமார் 70 ஆயிரம் முக கவசம் போதிய தரமின்றி உள்ளதால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.

Tags : Coimbatore , Free in ration, Coimbatore, 1.50 lakh mask, 70 thousand non-standard, officers
× RELATED ஏழைகளுக்கு ரேஷனில் வழங்கும் இலவச மாஸ்க் வாங்கியதில் பல கோடி முறைகேடு