×

சபரிமலையில் மண்டலகால பூஜை நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு அனுமதி: ஆன்லைனில் முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜையை முன்னிட்டு கடும் நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் கேரளாவில் சபரிமலை, குருவாயூர் உட்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் மாதம் 16ம் தேதி முதல் மண்டல காலம் தொடங்க இருப்பதால் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் மண்டல காலம் தொடங்க இருப்பதால் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ‘‘சபரிமலையில் மண்டல காலத்தை முன்னிட்டு கடும் நிபந்தனைகளுடன் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை நடத்திய  சான்றிதழ் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : devotees ,Sabarimala , Sabarimala, Zonal Puja, Condition, Devotee, Admission, Online Booking
× RELATED விளையாடுவதற்கு அனுமதி