×

பிரேசில் கால்பந்து வீரர்கள் 10 பேருக்கு கொரோனா

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் தேசிய கால்பந்து போட்டியான சீரி-ஏ கால்பந்து தொடரில் களமிறங்கிய 2 அணிகளைச் சேர்ந்த 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், போட்டி கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. ஒருவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெறும் இத்தொடரின் நடப்பு சீசன், கொரோனாவால் தாமதமாகி நேற்று முன்தினம் தான் தொடங்கியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை விளையாட வேண்டும்.போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கில் நடக்கின்றன. ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போட்டி தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஒவ்வொரு வீரரும் கொரோனா சோதனை செய்வது கட்டாயம்.

கோயானியாவில் கோயாஸ் எப்சி - சா பாலோ எப்சி அணிகள் மோத தயாராகின. சா பாலோ அணி வீரர்கள் களத்தில் இறங்கி ‘வார்ம் ஆப்’ செய்துகொண்டு இருந்தனர். கோயாஸ் அணி வீரர்கள் வருகைக்காக காத்திருந்த நேரத்தில் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. களமிறங்க இருந்த 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானதுதான் இதற்கு காரணம். இது குறித்து கோயாஸ் எப்சி கிளப்பின் தலைவர் மார்செலோ, ‘எங்கள் அணியின் 23 வீரர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. துரதிர்ஷ்டவசமாக அதன் முடிவுகள் இன்றுதான் தாமதமாக எங்களுக்கு கிடைத்தது. அதனால்தான் போட்டியை கடைசி நேரத்தில் ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டது’ என்று விளக்கம் அளித்துள்ளார். இதே பிரச்னை காரணமாக பல்மெய்ராஸ்-வாஸ்கோட காமா அணிகள் மோத இருந்த ஆட்டம் உட்பட 4 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : footballers ,Corona ,Brazilian , Brazil, soccer players, for 10, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...