×

இந்தி மொழி திணிப்பு விஷயத்தில் கனிமொழிக்கு மாஜி முதல்வர் குமாரசாமி ஆதரவு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி டிவிட்டர் பதிவு: நாட்டில் பல மொழிகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருப்பதில் இந்தியும் ஒன்று மட்டுமே. ஆனால் பிற மொழிகளை காட்டிலும் இந்தி மொழி வளர்ச்சிக்கு மட்டும் மத்திய அரசு மறைமுகமாகவும் நேரடியாக ஆதரவு கொடுத்து வருகிறது. பல வழிகளில் இந்தியை திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பாகம் தான் சகோதரி கனிமொழியிடம் இந்தி தெரியாத நீ இந்தியரா என்று எழுப்பியுள்ள கேள்வியாகும். இந்த விஷயத்தில் கனிமொழி கொடுத்துள்ள பதிலுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்.


Tags : Chief Minister ,Kumaraswamy ,Kanimozhi , Hindi Language Dump, Kanimozhi, Former Chief Minister Kumaraswamy, Support
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...