×

பெர்சாய்ட் விண்கற்கள் பூமியில் விழும் காட்சி: இன்று நள்ளிரவு பார்க்கலாம்

சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன்பு வானவெளியில் நியோவைஸ் என்னும் வால் நட்சத்திரம் தோன்றியது. இந்த வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற குப்பை போன்ற கற்கள் தற்போது வான்வெளியில் மிதந்தபடி இருக்கின்றன. இந்த விண்கற்களை இன்று நள்ளிரவு வான்வெளியில் பார்க்கலாம் என்று இயற்பியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கோடை காலத்தின் பிற்பகுதியில், வெப்ப நிலை மாற்றத்தால் உருவாகியுள்ள விண்கல் பொழிவாக இது இருக்கும். பொதுவாக, வான் வெளியில் வியாழன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடையில் மிதக்கின்ற விண்கற்கள், பூமியை நோக்கி வரும். அப்போது அவை பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் ஒரு மோதல் அல்லது உராய்வு ஏற்படும். அப்போது அந்த விண் கல் தீப்பற்றி எரிய தொடங்கும். அதனால் எரிகல் பூமியில் விழுவது போன்ற தோற்றம் தெரியும்.

அப்படி கடந்த சிலவாரத்துக்கு முன்பு விழுந்த நியோவைஸ் வால்நட்சத்திரத்தின் குப்பைதான் இந்த சிறுசிறு கற்கள். இதற்கு பெர்சாய்ட் என்று பெயர். இந்த விண்கற்கள் விழுவதை இன்று நள்ளிரவில் ஒரு மணி நேரம் வானில் பொதுமக்கள் காணலாம். இந்த விண்கற்களை இந்த ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி மற்றும் 12ம் தேதிகளில் பார்க்க முடியும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதியில் பார்க்க முடியும் என்றாலும் மேக மூட்டம் இருந்தால் அதை பார்க்க முடியாது. அமெரிக்காவில் அலபாமாவில் இன்று நள்ளிரவு முதல் நாளை காலை சூரியன் உதயமாகும் வரை பார்க்க முடியும் என்று நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த விண்கற்களை நாம் சாதாரண கண்களால் பார்க்கலாம். எந்த உபகரணமும் தேவையில்லை.


Tags : Earth , Bursoid meteor, falling scene on Earth, tonight at midnight
× RELATED நிலவுக்கு விண்கலத்தை ஏவியது சீனா