×

கோயிலை உடைத்து கொள்ளை

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் வாலவட்ட அம்மன் கோயில் உள்ளது. இங்கு அதே கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், பூசாரியாக உள்ளார். கடந்த 4 மாதமாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலையில் இக்கோயில் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுபற்றிய தகவல் கிராமம் முழுவதும் காட்டு தீப்போல் பரவியது. இதையொட்டி ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர்.
தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி, நள்ளிரவில் கோயிலை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், உண்டியலை உடைத்து அதில் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரம் இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : Temple, broken, looted
× RELATED எந்த கோயில்? என்ன பிரசாதம்?