×

மூன்றாவது முறையாக காவல் நிலையம் மூடல்

புழல்: சோழவரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு 3 காவலர்களுக்கு கொரோனா வந்தது. இதனால், காவல் நிலையம் அப்போது, இரண்டு முறை மூடப்பட்டு ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சோழவரம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் 6 காவலர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதார துறையினர் தெரிவித்த நிலையில் மீண்டும் சோழவரம் காவல் நிலையம் நேற்று காலை மூன்றாவது முறையாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், தற்காலிகமாக சோழவரம் ஒரக்காடு சந்திப்பில் உள்ள அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் காவல் நிலையம் செயல்படும் என போலீசார் தெரிவித்தனர்.   


Tags : Third time, police station, closure
× RELATED இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேருக்கு கொரோனா: காவல் நிலையம் மூடல்