×

மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.எஸ். சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி!!!

மதுரை:  மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., எஸ்.எஸ். சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரையில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்று வருகிறது. எனவே இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1265 ஆக உள்ளது.

இதனால் மக்கள் பெரிதளவு அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இருப்பினும் வைரஸை கட்டுப்படுத்த முடியாமல், மாறாக தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவலர்கள் என அனைவரும் கொரோனாவிற்கு பலியாகி வருகின்றனர். மேலும் சமீப காலமாக கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்றானது பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது மதுரை மாவட்டம் தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., எஸ்.எஸ். சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மதுரையில் 2 தினங்களுக்கு முன்பாக சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., மாணிக்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரையை பொறுத்தவரையில் இதுவரை 4 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Madurai South Constituency MLA ,SS Saravanan ,Corona , Madurai South Constituency MLA, S.S. Saravanan,Corona
× RELATED நீதிபதி எஸ்.முரளிதர் மாற்றம் குறித்த...