×

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு!: எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரம்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை தேயிலை தோட்ட பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு அதில் மலைத்தோட்ட தொழிலாளர்கள் உட்பட 78 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 12 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 26 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 17 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.

இதனை தொடர்ந்து இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பத்தனம்திட்டா, பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 - 2019ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் ராஜமலை பாதிக்கப்படவில்லை. இதனாலேயே தற்போதைய மழைக்கு இங்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

Tags : landslides ,survivors , Death toll ,landslides , Intensive rescue ,
× RELATED சென்னை எழும்பூர் சிக்னலில் டிராவல்ஸ்...