×

இந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000 மக்கள் வெளியேற்றம்

ஜகார்ட்டா: இந்தோனேசியாவில் குமுறிக் கொண்டிருந்த சினாபங் எரிமலை இன்று வெடித்ததில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த சாம்பல் துகள்கள் பரவியுள்ளது. 16,400 அடி உயரத்திற்கு சாம்பல் துகள்கள் பறந்தன. இந்தோனேசியாவில் எந்நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 120 எரிமலைகள் உள்ளன. இதில் சினாபங் என்ற எரிமலை அவ்வப்போது வெடித்து அச்சுறுத்தி வருகிறது. சுமார் 400 ஆண்டுகள் பழைமையானது இந்த மலை, கடந்த 2010-ல் வெடித்து சாம்பலை கக்கியது. அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அதன்பின் எரிமலை வெடித்ததில் 2014-ல் 16 பேர், 2016 7 பேர் உயிரிழந்தனர்.

சினாபங் கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. இதனால் எந்த நேரத்திலும் வெடித்து எரிகுழம்பை கக்கலாம் என்பதால், 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 30,000 மக்கள் முன்னெச்சரிகையாக அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று திடீரென வெடித்து எரிகுழம்பை கக்கியது. எரிமலை வெடித்த வேகத்தில் சாம்பல் துகள்கள் 16,400 அடி உயரத்திற்கு பறந்தன. பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜாவா மற்றும் யோக்யகர்த்தா மாகாணத்திற்கு இடையே அமைந்துள்ள மவுண்ட் மெரபி எரிமலை சீற்றத்துடன் வெடித்தது. இதன் காரணமாக வானில் புகை மூட்டங்கள் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. இந்தோனேசியாவில் செயல்பாட்டின் இருக்கக் கூடிய சக்தி வாய்ந்த எரிமலைகளில் மவுண்ட் மெரபி எரிமலையும் ஒன்று. 2010 ஆம் ஆண்டு மெரபி எரிமலை வெடித்ததில் சுமார் 350 பேர் பலியாகி உள்ளனர்.



Tags : Sinapung ,Indonesia ,evacuation , Indonesia, volcano
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்