×

வீடியோ கான்ஃபரன்ஸ் விசாரணை வழக்கறிஞர்களுக்கு வரமாக அமைந்துள்ளது; இறுதி ​விசாரணையையும் நடத்தலாம்!: ஐகோர்ட் கிளை நீதிபதி

மதுரை: வீடியோ கான்ஃபரன்ஸ் விசாரணை வழக்கறிஞர்களுக்கு வரமாக அமைந்திருப்பதாகவும், வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் இறுதி விசாரணை நடத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மூடப்பட்டுள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரியில் கீழமை நீதிமன்றங்களும் மூடப்பட்டன.

வீடியோ கான்பரன்ஸ் வசதியில் அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கடந்த ஜூலை மாதத்தில் 5 ஆயிரத்து 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அதில் 4 ஆயிரத்து 832 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வீடியோ கான்ஃபரன்ஸ் விசாரணையில், கடந்த 2 மாதங்களாக வழக்கறிஞர்கள் குக்கிராமங்களில் இருந்தும், காரில் இருந்தவாறும், காரில் பயணம் செய்தபடியும் தங்கள் வாதங்களை திறம்பட எடுத்து வைத்ததாக நீதிபதி திரு. பி. புகழேந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சில இடங்களில் இணையதள இணைப்பு சரியாக கிடைக்காத நிலையில், வழக்கறிஞர்கள் வழக்கை நடத்தும் ஆர்வம் காரணமாக இணைப்பு கிடைக்கும் பகுதிகளுக்கு சென்று வீடியோ கான்ஃபரன்ஸ் வசதியில் வாதங்களை எடுத்து வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வீடியோ கான்ஃபரன்ஸ் விசாரணை வழக்கறிஞர்களுக்கு வரமாக அமைந்திருப்பதாகவும், வீடியோ கான்ஃபரன்ஸ் வசதியில் இறுதி விசாரணை நடத்தலாம் என்றும் நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Tags : Video conferencing ,hearing ,trial lawyers ,Branch Judge ,High Court , Video conferencing , trial lawyers, Final hearing ,
× RELATED தூத்துக்குடியில் நாளை திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம்