×

தஞ்சை மாவட்டத்தில் குறுவை நடவுப்பணி வயல்களில் இயற்கை உரத்திற்காக மேய்ச்சலுக்கு வந்துள்ள வாத்துகள்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் கோடை அறுவடைப்பணி முடிந்து தற்போது குறுவை சாகுபடி பணி தொடங்கவுள்ள நிலையில் ,வயலுக்கு தேவையான இயற்கை உரத்திற்காக வந்துள்ள வாத்துகள். தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடி அறுவடை பணி 70 சதவீதம் முடிந்துள்ளது. வயலுக்கு ரசாயன உரத்தை பயன்படுத்துவதால் நெல்மணிகளின் தரம் குறைந்து விடுவதாலும்,எடையில்லாமல் போய் விடும்.இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்பவர்கள் வயல்களில் நடவு செய்வதற்கு முன்பு வாத்துக்களை வயலில் விட்டு ஒரு இரவு வைத்திருப்பார்கள். பகலில் வயலில் மேய்ச்சல் விடுவார்கள்.

பகல் மற்றும் இரவு முழுவதும் வயல்களில் இருப்பதால், அதனுடைய எச்சங்கள் வயலில் விழுந்து எருவாகிவிடும். இதனால் ஒரு ஏக்கருக்கு நெல் மூட்டைகளை கூடுதலாக கிடைப்பது குறிப்பிடதக்கது. ஒரு நாள் 1000 வாத்துக்கள் , வயலில் வைத்திருப்பதற்கு சுமார் ரூ. 500 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் குறுவை நாற்று நடவு பணி தொடங்கி தற்போதும் பெரும்பாலான பகுதிகளில் நடவு பணி முடிந்துள்ளது. இதனையடுத்து குறுவை சாகுபடி அதிகமான விளைச்சல் தர வேண்டும் என்பதற்காக வேலூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாத்துக்கள் தஞ்சை மாவட்டத்திற்கு மேய்ச்சலுக்காக வந்துள்ளன.

தஞ்சை மாவட்டம் மெலட்டூர், ஒரத்தநாடு, பாப்பாநாடு, மாரியம்மன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடவு பணி தொடங்க உள்ள நிலையில் வயல்களில் இயற்கை உரத்திற்கு வாத்துக்களை மேய்ச்சலுக்காக கொண்டு வந்துள்ளனர். ரசாயன உரங்களால் பல்வேறு உபாதைகள் ஏற்படும் நிலையில் , அனைத்து விவசாயிகளும் இயற்கை உரங்களை வயலுக்கு வழங்கினால், வரப்புகளில் உள்ள புல், பூண்டுகள், நண்டுகள் என நன்மை செய்யும் பூச்சிகள் அழியாமல் காப்பாற்றப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : planting fields ,Kuruai ,Tanjore district , Tanjore District, Kuruai Planting, Natural Fertilizer, Ducks
× RELATED திருமானூர், தா.பழூர் பகுதிகளில்...