×

தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்தில் 10 யானைகள் அட்டகாசம்: தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தியது

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தி 10 யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இவைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உனி கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் விவசாயி. இவர் தனது விளை நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். நல்ல விளைச்சலை தந்து பறிப்பிற்கு தயாராக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அய்யூர் வனப்பகுதியில் இருந்து சுற்றித்திரிந்த 10 யானைகள் உனிசெட்டி கிராமத்தில் புகுந்தது. பின்னர் கிருஷ்ணன் வயலில் நுழைந்த யானைகள் அங்கு பயிரிட்டிருந்த தக்காளியை கால்களால் மதித்தும், தின்றும் சேதப்படுத்தின.

இதை தொடர்ந்து நேற்று காலை தோட்டத்தில் தக்காளியை பறிக்க சென்ற விவசாயி கிருஷ்ணன் தோட்டம் முழுவதும் யானைகளால் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது பற்றி தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளால் சேதப்படுத்திய தக்காளி தோட்டத்தை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க உறுதி அளித்தார்.
இது பற்றி விவசாயி கூறுகையில், நன்கு விளைந்து காணப்பட்ட தக்காளிகளை 10 யானைகள் தோட்டத்தில் புகுந்து நாசப்படுத்தி உள்ளது. இதனால் ₹1.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது அரசு இழப்பீடு வழங்கி, தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மின் வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : village ,Dhenkanikottai , Dhenkanikottai, 10 elephants, tomato garden
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...