×

சிறுவாணி அணையின் நீர்தேக்க பகுதியில் நிலச்சரிவு: முழு அளவில் நீர் தேக்க தடை

கோவை:  சிறுவாணி அணையின் நீர் தேக்க பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் முழு அளவில் நீர் தேக்க கேரள அரசு தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறுவாணி அணையின் நீர் தேக்க பகுதி 22.5 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. தென் மேற்கு பருவ மழை உச்சத்தில் இருக்கிறது. கடந்த 8ம் தேதி அணையின் நீர் தேக்க பகுதியில் 363 மி.மீ மழை பெய்தது. கடந்த ஒரு வாரத்தில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 800 மி.மீ அளவிற்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அணையின் நீர் மட்டம் உச்சத்தை எட்டி வந்த நிலையில், மூணாறில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு 24 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கனமழை பெய்யும் பகுதிகளில் அபாயம் தடுப்பு நடவடிக்கை எடுக்க கேரள அரசு உத்தரவிட்டது.

சிறுவாணி அணையின் நீர் தேக்கம் மலை உச்சயில் கூம்பு போன்ற வடிவில் அமைந்துள்ளது. அணையின் பக்கவாட்டு தாங்கு சுவர் அருகே சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அணைப்பகுதி ரோடுகளிலும் விரிசல் விட்டு காணப்படுகிறது. பல இடங்களில் மரங்களுடன் வேறுடன் சாய்ந்து விட்டது. அணைப்பகுதி மண் மேடுகளும் சரிந்து நீரில் மூழ்கி வருகிறது. தற்போது அணையில் 33.60 அடி உயரத்திற்கு நீர் தேக்கம் உள்ளது.  அணையில் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்க முடியும். ஆனால் கேரள நீர் பாசனத்துறை எவ்வித அறிவிப்பும் இல்லாமல் உபரி நீர் ஷட்டரை திறந்து விட்டது. அணையில் நீர் மட்டம் 60 சதவீதம் மட்டுமே இருக்கும் நிலையில் நீர் திறந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கேரள அரசு அதிகாரிகளுடன் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து நேற்று ஷட்டர் மூடப்பட்டது. அணையில் இருந்து சுமார் 4 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது. அணையின் பக்க சுவர்கள் பலமிழந்தால் ேமலும் தண்ணீர் வெளியேற்ற கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டாக சிறுவாணியின் பக்க சுவர்கள் பலமின்றி இருப்பதாக தெரிகிறது. சுவர்களை பாதுகாக்க கருங்கல் மூலமாக தடுப்பு அமைக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது. ஆனால் இதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அணைக்கு செல்லும் ரோடுகளில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து கிடக்கிறது.  அணைப்பகுதியில் நீர் தேக்கம், நீர் வெளிேயற்றம் குறித்த தகவல்கள் கோவை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சரியாக தெரியாத நிலைமை இருக்கிறது. அணையை சுற்றியுள்ள நிலத்தின் தன்மை, நீர் தாங்கு திறன், நிலச்சரிவு அபாயம் குறித்து ஆய்வு நடத்தவேண்டும். அணையின் பிரதான தாங்கு சுவரை பலமாக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : catchment area ,Landslide ,Siruvani Dam , Siruvani Dam, Reservoir Area, Landslide
× RELATED நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுமானப்பணியின் போது மண் சரிந்து விபத்து