×

கூடலூர், பந்தலூரில் சூறாவளிக்கு துண்டித்த மின் இணைப்புகளை சீரமைக்கும் பணியில் 300 ஊழியர்கள் தீவிரம்

கூடலூர்: கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் சுற்று வட்ட பகுதிகளில் கடந்த 2ம் தேதி ஞாயிற்றுக் கிழமை துவங்கி 6 நாட்கள் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதியினர் கடந்த ஆறு நாட்களாக மின்சாரம் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

சிங்காரா மின் நிலையத்தில் இருந்து வரும் பிரதான உயர் அழுத்த மின் பாதையில் உள்ள மின் கோபுரம் காற்றில் உடைந்ததால் அதனை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதேபோல் பல்வேறு பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காற்றில் விழுந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் கூடலூர் பந்தலூர் பகுதியில் பணியில் உள்ள 300க்கும் மேற்பட்ட மின் வாரிய பணியாளர்கள் தீவிர சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மண்டல தலைமை பொறியாளர் கலைச்செல்வி, வினியோக இயக்குனர் ஹெலன், செயற்பொறியாளர் ஜெயராஜ் ஆகியோர் மேற்பார்வையில் இந்த சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு தினங்களில் அனைத்து பகுதிகளிலும் மின் விநிேயோகம் சீரடையும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Pandharpur 300 ,Pandharpur , Kudalur, Bandalur, hurricane, electrical connections, 300 employees
× RELATED பந்தலூர் அருகே விவசாய நிலங்களை...