×

ஐபிஎல் டி20: சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 221 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

டெல்லி: சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 221 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்தது. ஐதராபாத் அணி இதுவரை 6 போட்டிகளில் ஆடி ஒரு போட்டியில் வென்றுள்ளது. இதையடுத்து அணியில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டேவிட் வார்னருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இன்று களமிறங்கவுள்ள 11 வீரர்களின் பட்டியலிலும் மாற்றங்கள் இருக்கும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் தலைமையில் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, மில்லர் என வலுவான பேட்டிங் ஆர்டர் உள்ளது. எனினும் அந்த அணியின் பவுலர்கள், எதிரணி பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். சேட்டன் சகாரியா, உனட்கட், கிறிஸ் மாரிஸ் மற்றும் ஆல் ரவுண்டர் ராகுல் டிவாட்டியா ஆகியோரின் பந்து வீச்சு அணியின் வெற்றிக்கு உதவவில்லை என்றே கூற வேண்டும். மும்பை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 172 ரன்கள் என ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டியது ராஜஸ்தான் அணி. ஆனால் பந்துவீச்சு எடுபடாததால் இப்போட்டியில் மும்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ராஜஸ்தான் அணியுடன் ஒப்பிடுகையில், ஐதராபாத் அணியின் பந்துவீச்சு சற்று பலமாகவே உள்ளது. இத்தொடரில் ரஷீத்கான் தொடர்ந்து சிறப்பாகவே பந்து வீசி வருகிறார். கலீல் அகமது, சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல், புவனேஸ்வர் குமார் மற்றும் விஜய சங்கர் ஆகியோரும் பந்துவீச்சில் கை கொடுக்கின்றனர். வார்னர், கேப்டன் வில்லியம்சன், பேர்ஸ்டோ, மனீஷ் பாண்டே, கேதார் ஜாதவ் என பேட்டிங் வரிசையும் வலுவாகவே உள்ளது. மேலும் ஐதராபாத் அணி இத்தொடரில் இதுவரை குறைந்த ரன் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்று போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. ராஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் -124, சாம்சன் – 48 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது….

The post ஐபிஎல் டி20: சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 221 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி appeared first on Dinakaran.

Tags : IPL T20 ,Rajasthan ,SeaRisers Hyderabad ,Delhi ,Rajasthan Royals ,Hyderabad ,SeaRisers ,Hyderabad team ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது...