×

இனி மேலும் மூடுவது நல்லதல்ல..செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்..: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.33 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,33,364 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 20,009,270 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,887,219 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 64,923 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் பள்ளிகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இனி மேலும் பள்ளிகளை மூடுவது நல்லதல்ல. பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பான விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களின் பள்ளிப் படிப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இனி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் பள்ளிகள் மூடல் என்பது கடைசி பட்சமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும். எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Tags : Boris Johnson ,United Kingdom ,Schools , UK, Prime Minister Boris Johnson, Corona, Schools
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...