×

திருப்புவனம் பகுதியில் வெற்றிலை கொடிக்கால் விவசாயப் பணி தீவிரம்

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம்புதூர், நெல்முடிகரை, நயினார்பேட்டை, வெள்ளக்கரை, கலியாந்தூர், மடப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெற்றிலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நெல் பயிரிட்ட நிலங்களை குத்தகைக்கு எடுத்து ஐந்து முதல் 15 விவசாயிகள் வரை இணைந்து வெற்றிலை சாகுபடியில் ஈடுபடுகின்றனர். மற்ற விவசாயத்தை போல அல்லாமல் வெற்றிலை விவசாயம் கூட்டு தொழிலாளகவே செய்யப்படுகிறது. முதலில் நிலத்தில் அகத் தி விதைகளை விதைத்து வளர்ந்து சில நாளில் தண்டு வரும் பருவத்தில் வெற்றிலை கொடிகளை நட்டு அகத்தி மரத்தில் படர விடுவார்கள்.

வெற்றிலை பயிரிட்டு ஆறு மாதத்திற்கு பிறகுதான் வெற்றிலை அறுவடை தொடங்கும். குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரை வெற்றிலை அறுவடை நடைபெறும், 15 நாட்களுக்கு ஒரு முறை வெற்றிலை கிள்ளப்படும். ஏக்கருக்கு ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் கிலோ வெற்றிலை வரை கிடைக்கும். கிலோ 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. திருப்புவனம் பகுதி வெற்றிலை சிவகங்கை, காரைக்கடி, தேவகோட்டை ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினசரி அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொடிக்கால் விவசாயத்திற்கு செலவுகள் அதிகரித்து வருகிறது. போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை. ஆனாலும், இந்த விவசாயத்தை விடாமல் செய்து வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

Tags : turning point area ,area , Turnaround, betel, agricultural work
× RELATED போடியில் நெல் நாற்றங்கால் பாவும் பணி தீவிரம்