×

மழை பெய்தால் அவ்வளவு தான் சறுக்கி விழ வைக்கும் சாலை: காரைக்குடி அருகே மக்கள் அவதி

காரைக்குடி: காரைக்குடி அருகே சாலை இல்லாததால் கிராமமக்கள் மழைக்காலங்களில் சறுக்கி விழும் அளவிற்கு சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.
காரைக்குடி அருகே சாக்கவயல் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு குடியிருப்பு, சுட்டிநெல்லிபட்டி, மலைந்தாவு, தச்சபிளான்பட்டி, குளப்படி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வடக்கு குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட பிடாரியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலையில்லை.பழைய குடியிருப்புக்கு பகுதிக்கு செல்லும் சாலை மட்டும் உள்ளது. மற்றவீதிகள் அனைத்தும் சாலையே பார்க்காமல் உள்ளது. மழை பெய்தால் பயன்பாட்டில் உள்ள மண் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி ஊருக்குள் நுழைய முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மழைக்காலம் என்றால் உள்ளே நுழைய முடியாது. நடந்து கூட செல்ல முடியாது. இரவு நேரங்களில் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் கண்டுகொள்ளப்படாத நிலையே உள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த தமிழ்மணி கூறுகையில்,`` மண்சாலையால் பல ஆண்டுகளாக அவதியடைந்து வருகிறோம். மழை பெய்தால் வழுக்கி விழுவது வாடிக்கையாகி வருகிறது. இப்பகுதியில் சாலை அமைக்க ந டவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தலைவர் உறுதியளித்துள்ளார்.  அதிகாரிகள் உரிய நிதி ஒதுக்கி சாலைவசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மக்கள் பயன்பாட்டில் இருந்த போரில் இருந்த மோட்டார் பழுது எனக்கூறி எடுத்து சென்றனர்.

அதன்பிறகு அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இருந்த தண்ணீர் டேங்கையும் எடுத்துச் சென்றுவிட்டனர். இதனை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’’ என்று கூறினார். ஊராட்சி தலைவர் தமிழ்மணி கூறுகையில், ``கொரோனாவால் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. நிதி வந்தவுடன் நிச்சயம் சாலை அமைக்கப்படும். என்ஆர்ஜீஎஸ் நிதியில் ஒரு வீதிக்கு மட்டும் பேவர் பிளாக்சாலை அமைக்கப்பட உள்ளது. தேர்தலில் போது மக்களுக்கு வாக்களித்தின்படி கட்டாயம் குடியிருப்பு பகுதிகளுக்கு சாலை அமைத்து தருவேன்’’ என்றார்.

Tags : Road ,Karaikudi , Rain, Karaikudi, people
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...