×

குளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

குளித்தலை: குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் திமுக எம்எல்ஏ ராமர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதானல் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3  லட்சத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை கொரோனா பரவி வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் முதல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என அனைவருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது.Tags : Ram ,Bath MLA ,MLA ,Corona ,Ram Kulithalai , Bath, MLA Ramer, Corona virus
× RELATED ராமர் கோயில் பூமி பூஜையை தொடர்ந்து...