மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் பாரபட்சம் காட்டுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!!!

திருவனந்தபுரம்:  மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜமலையில் உள்ள கண்ணன் தேவன் தேயிலை தோட்டத்தில் கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, தமிழகத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் 43 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மண் சரிவில் சிக்கி இறந்தவர்களில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மல்லி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எடுத்து வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கேரள அரசு எந்த வித வசதியும் செய்து கொடுக்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கேரள அரசு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் முடிவடைந்த பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>