×

போக்குவரத்து விதி மீறல் ரூ.19.99 கோடி வசூல்

சென்னை: ஊரடங்கு மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 140 நாட்களில் ரூ.19.99 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24 ம் தேதி  முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேநேரம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை சில தளர்வுகளுடன் தமிழகம் முழுவதும் 7ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த 140 நாட்களில் 8 லட்சத்து 60 ஆயிரத்து 414 வழக்குகள் பதிவு செய்து 9 லட்சத்து 49 ஆயிரத்து 39 பேரை போலீசார் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 69 ஆயிரத்து 426 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று வரை 19 கோடியோ 99 லட்சத்து 40 ஆயிரத்து 643 ரூபாய் அபராதமாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags : Traffic, rule violation, Rs 19.99 crore, collection
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...