×

கணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் 1.94 லட்சம் சங்கங்களை புதுப்பிக்க யாருக்கு அதிகாரம்? தமிழக அரசு புதிய உத்தரவு

சென்னை: கணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் இருக்கும் பட்சத்தில் சங்கங்களை புதுப்பிக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர் சங்கம், கூட்டுறவு சங்கம், குடியிருப்போர் நல சங்கம் என எந்த சங்கங்களாக இருந்தாலும் தமிழ்நாடு பதிவுத்துறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம். தற்போது வரை 1 லட்சத்து 94 ஆயிரம் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த சங்கங்கள் நிதிஆண்டிற்கு குறைந்தது ஒரு முறையாவது பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு சங்கங்களும் பொதுக்குழு கூட்டத்தில் சமர்பிக்கப்பட்ட ஆண்டறிக்கைகளை 6 மாதங்களுக்கு மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான சங்கங்கள் ஆண்டு கணக்குகளை முறையாக சமர்பிப்பதில்லை. இதன் காரணமாக அந்த சங்கங்கள் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், சங்கங்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் உயர் அதிகாரிகளை முறையிடுகின்றனர். ஆனாலும், அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சங்கங்களின் கணக்குகளை தாமதம் செய்யப்படும் பட்சத்தில், அவற்றை புதுப்பிக்க 10 ஆண்டுகளுக்குள் இருப்பின் மாவட்ட பதிவாளரையும், 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருந்தால், பதிவுத்துறை ஐஜியிடமும், 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் பட்சத்தில், அந்த சங்கங்களை புதுப்பிக்கும் அதிகாரம் வழங்கி வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சங்கங்களை புதுப்பிப்பது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கும், தமிழக அரசுக்கு முறையீடு செய்ய அலைவது தவிர்க்கப்படும்.

Tags : Government of Tamil Nadu , Account Filing, Delay, 1.94 lakh Associations, Who has the power to renew? , Government of Tamil Nadu, New Order
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...