×

சோழவந்தான், மண்ணச்சநல்லூர் 2 அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி

சென்னை: சோழவந்தான் மற்றும் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கம். மதுரையில் வசித்து வரும் இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.   தனியார் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் எம்எல்ஏவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வர், அமைச்சருடன் பங்கேற்பு: கடந்த 6ம் தேதி திண்டுக்கல் மற்றும் மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு புதிய திட்டங்களை துவக்கி வைத்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன், சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கமும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பெண் எம்எல்ஏவுக்கு கொரோனா: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன். இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், நேற்று முன்தினம் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில், பரமேஸ்வரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவரது கணவர் மற்றும் மகன்களுக்கும் பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை. திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் எம்எல்ஏ பரமேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : AIADMK ,Cholavanthan ,Mannachanallur 2 Corona ,MLA ,Corona ,Mannachanallur 2 , Cholavanthan, Mannachanallur, 2 AIADMK MLA, Corona
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...