×

ஆக்ராவில் மகனை கயிற்றால் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு தாக்கிய தந்தை கைது..!!

ஆக்ரா: ஆக்ராவில் தன் மகனைத் தாக்கி கிராம மக்களின் முன்னிலையில் கயிற்றால் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்ட தந்தை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 52 விநாடிகள் கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் நேற்று வைரலானது. அதில், ஒரு வீட்டின் ஜன்னலில், கயிற்றால் ஒரு சிறுவன் தலைகீழாகக் கட்டப்பட்டிருக்கிறான். அவனை, கிராம மக்கள் முன்னிலையில் ஒருவர் தாக்குகிறார். இரக்கமின்றி அச்சிறுவன் தாக்கப்படுவதைக் கண்டு, கூட்டத்தில் இருந்த சிறுவன் அதிர்ச்சியடையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இதுகுறித்து மேற்கு ஆக்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். நான்கு நாட்களுக்கு முன், தன் மனைவியுடன் சண்டையிட்ட அந்த நபர், தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகனை அவர் கயிற்றில் தலைகீழாகக் கட்டி தாக்கியுள்ளார். நாங்கள் அவரை விசாரிக்கிறோம். அவர் தனது குற்றத்தை இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. இதுவரை குடிபோதையில் இருந்தார் என்று காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Agra , Agra, father, arrested
× RELATED வார்த்தையில் சொல்லக்கூடியதா...