×

விடாமல் மிரட்டும் கொரோனா; கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமக்கு தொற்று உறுதியானது குறித்து ஸ்ரீராமுலு டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஜூன் மாதம் முதல் வேகமாக பரவி வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமலும், எந்தவித பாகுபாடுமின்றியும் எல்ரோரையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது. கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள் என பாகுபாடின்றி தனது தாக்குதலை கொரோனா தொடுத்து உள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர். தொற்று உறுதி செய்யப்பட்டதை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; இன்று எனக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததை அடுத்து செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Tags : Sriramulu ,Karnataka , Corona, Karnataka, Minister of Health, Sriramulu
× RELATED வருமான வரித்துறையினரிடம் ரூ.6.7 லட்சம் பறிமுதல்