×

மஞ்சூர் -தங்காடு சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: சீரமைப்பு பணிகள் தீவிரம்

மஞ்சூர்: மஞ்சூர் தங்காடு சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைதுறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கன மழையுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசியதால் மஞ்சூர் சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் ராட்சத மரங்கள் விழுந்தது. பெரும்பாலான மரங்களும் சாலைகள் மற்றும் மின் கம்பங்கள் மீது விழுந்ததால் மின் விநியோகம், போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் கம்ப்ரஸர், ஜே.சி.பி. பவர் ஷா உள்ளிட்ட இயந்திரங்களின் உதவியோடு சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். மஞ்சூர் - தங்காடு சாலையில் 30க்கும் மேற்பட்ட ராட்சத கற்பூற மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் வாகன போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்து போனது.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் விஸ்வநாதன், குந்தா உதவி பொறியாளர் பாலசந்தர், உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன், சாலை ஆய்வாளர் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் ஜே.சி.பி இயந்திரங்களுடன் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் குந்தாபாலம், கிண்ணக்கொரை, பிக்கட்டி சுற்றுபுற பகுதிகளில் சாலை ஆய்வாளர்கள் நஞ்சுண்டன், சுரேஷ், ரவிக்குமார் மேற்பார்வையில் சாலையில் விழுந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் காற்று, மழை குறைந்தநிலையில் நேற்று பிற்பகல் சுமார் 3 மணி முதல் மீண்டும் கன மழை பெய்தது.

Tags : road ,Manjur-Thangadu , Manzoor-Thangadu road, trees, traffic damage
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி