×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது நஜார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு..!!

புத்காம்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது நஜார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். மொஹிந்த்போரா பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ஹமீத் நஜார். இவர், புத்காம் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மோர்ச்சா பிரிவுத் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை அப்துல் ஹமீத் நஜார் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், சமீப காலங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜ.,வைச் சேர்ந்த தலைவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த 6ம் தேதி, குல்காம் பகுதியில் பாஜ., பஞ்சாயத்து தலைவர் சர்பஞ்ச் சஜத் அகமது கான்டே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, கடந்த ஜூலை மாதம், பந்திபோரா பாஜ., முன்னாள் தலைவர் வாசிம் பாரி, அவரது தந்தை மற்றும் சகோதரர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Abdul Hameed Nazar ,Terrorists ,fire ,BJP ,Budgam district ,Jammu ,Kashmir ,Jammu and Kashmir ,district chief , Jammu and Kashmir, BJP district chief, Abdul Hameed Nazar, terrorists, shooting
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...