×

திருஉத்திரகோசமங்கையில் இருந்து புனித தீர்த்தம், மண்ணுடன் அயோத்திக்கு சைக்கிளில் கிளம்பிய 60 வயது முதியவர்

ஆர்.எஸ்.மங்கலம்: திருஉத்திரகோசமங்கை, தேவிபட்டினத்தில் இருந்து எடுத்த புனித தீர்த்தம், கல், மண்ணை ராமர் கோயில் கட்டுமான பணியில் சேர்க்க அயோத்திக்கு சைக்கிளில் புறப்பட்டு சென்ற 60 வயது முதியவரை பக்தர்கள் ஆர்வத்துடன் வழியனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோசமங்கையை சேர்ந்தவர் சூரியநாராயணன் (60). இவர், ராமர் கோயில் கட்டுமான பணிக்காக திருஉத்திரகோசமங்கையில் இருந்து கல், தேவிபட்டினத்தில் புனித தீர்த்தம், மண் எடுத்து கொண்டு சைக்கிளில் நேற்று அயோத்திக்கு புறப்பட்டார். இவரை பக்தர்கள் ஆர்வத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

சூரியநாராயணன் கூறுகையில், ‘‘உலகின் ஆதி சிவதலம் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள திருஉத்திரகோசமங்கையில் இருந்து கல் எடுத்துள்ளேன். தேவிபட்டினம் கடலில் நவகிரகங்களை அமைத்து புனித நீராடிய பின் ராமபிரான் இலங்கை சென்று சீதாபிராட்டியை மீட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனால் இங்கிருந்து புனித தீர்த்தம், மண், கல் எடுத்து சென்று ராமர் கோயில் கட்டுமான பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளேன். ஒரு மாத காலத்திற்குள் அயோத்தி சென்று விடுவேன். ஏற்கனவே சைக்கிளில் 6 முறை காசிக்கும், 3 முறை ஐயப்பன் கோயிலுக்கும் சென்றுள்ளேன்’’ என்றார்.

Tags : Thiruuthirakosamangai ,theertham ,Ayutthaya ,Ayodhya , Thiruuthirakosamangai, sacred theertham, soil, Ayodhya, old man
× RELATED தொழிலாளி மாயம்