×

இந்தியர் என்றால் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உருவானது எப்போது?.. கனிமொழி ட்வீட்

சென்னை: இந்தியர் என்றால் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உருவானது எப்போது? என திமுக எம்.பி. கனிமொழி டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் போலீசார் என்னை இந்தியரா என கேட்டனர். சிஐஎஸ்எஃப் போலீசார் இந்தியில் பேசியதால் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டேன். அதற்கு அந்த பெண் போலீஸார் என்னை இந்தியரா என கேட்டார். இந்தி தெரிந்தால்தான் இந்தியராக இருக்க முடியுமா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என கூறினார்.


Tags : Indian ,Kanimozhi , Indian, Hindi, Kanimozhi, Tweet
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்