×

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி: பிரதமராக 4-வது முறை மீண்டும் பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே...புத்த கோயிலில் பதவி பிரமாணம்.!!!

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இலங்கை பிரதமராக மகிந்தா ராஜபக்சே பதவியேற்றார். இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே  தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 225 இடங்களில் 59.9 சதவீத வாக்குகளுடன் அக்கட்சி 150 இடங்களை கைப்பற்றியது. ராஜபக்சேக்கு மட்டுமே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர் விருப்ப  ஓட்டுகள் கிடைத்துள்ளன. இது இலங்கை தேர்தல் வரலாற்றில் எந்த வேட்பாளரும் பெறாத மகத்தான வெற்றி.

இந்நிலையில், இலங்கை பிரதமராக மகிந்தா ராஜபக்சே 4வது முறையாக பதவியேற்றார். கொழும்பு புறநகர் கெலானியாவில் உள்ள புனித ராஜமகா விகாரியா புத்த கோயிலில் இலங்கை அதிபரும் சகோதரருமான கோத்தபய முன்னிலையில்  மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே, பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து, புதிய நாடாளுமன்றத்தின் கூட்டம் வருகிற 20ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகிந்தா ராஜபக்சே இந்நாட்டு பிரதமராக கடந்த 2004 முதல் 2005 வரையிலும், 2018ல் 3 மாதங்களும் இருந்துள்ளார். பின்னர், கோத்தபய ராஜபக்சே அதிபரானதும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, 2019ல் மகிந்தா அந்த பதவியில்  நியமிக்கப்பட்டார். தற்போது 4-வது முறை பிரதமராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி வகிக்கிறார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அதிபருக்காக அதிகாரங்களை குறைக்கும் 19வது அரசியல் சாசன சட்ட திருத்தம் நீக்க கோத்தபய விரும்புகிறார். தற்போது, அவரது சகோதரர்  மகிந்தா ராஜபக்சே பிரதமராக பதவியேற்கும் நிலையில், விரைவில் இலங்கை நாடாளுமன்றத்தில் 19வது சட்ட திருத்தம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Temple. ,Mahinda Rajapaksa ,Buddhist , Mahinda Rajapaksa re-elected as Prime Minister for the 4th time ... sworn in at the Buddhist Temple. !!!
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...